மேலும் செய்திகள்
நாய்கள் கடித்து ஆடுகள் பலி
22-Oct-2024
திருநீர்மலை, உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து, 300 ஆடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, நேற்று காலை பல்லாவரத்திற்கு வந்தது. லாரியை, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அலிப்கான், 36, என்பவர் ஓட்டினார். அவருடன் கூடுதல் ஓட்டுனர் உட்பட நான்கு பேர் வந்தனர்.பல்லாவரம் - திருநீர்மலை சாலையில், திருநீர்மலை அருகே புறவழிச்சாலையை கடந்து பல்லாவரம் நோக்கி சென்ற லாரி, சாலை வளைவில் வேகமாக திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.லாரி கவிழ்ந்த வேகத்தில், ஓட்டுனர் அலிப்கான் மற்றும் உடன் வந்தவர்கள் துாக்கி வீசப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.அதேநேரத்தில், லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த ஆடுகளில், 29 ஆடுகள் இறந்தன. போலீசார் விரைந்து, இறந்த ஆடுகளையும், கவிழ்ந்த லாரியையும் அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Oct-2024