மேலும் செய்திகள்
கல்லுாரியில் கருத்தரங்கம்
12-Sep-2025
சென்னை;சென்னை பல்கலையின், மானுடவியல் துறை மற்றும் வனமா கலை, கல்வி, கலாசாரம் அறக்கட்டளை சார்பில், 'கலாசாரம், காலநிலை, பிரபஞ்சம்' என்ற தலைப்பில், மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு, நேற்று துவங்கியது. கருத்தரங்கில், சென்னை பல்கலை துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர் ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது: மனிதர்களின் பாரம்பரியங்களை காப்பதில், மானுடவியல் துறை முக்கிய பங்காற்றுகிறது. மேலும், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு கலாசாரம் இருக்கிறது. கலாசாரம் இல்லையேல், இந்த உலகில் எதுவும் இல்லை. கலாசாரத்தை போல, காலநிலையும் மிகவும் முக்கியம். அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தில் இருந்து உலகை காக்க வேண்டியது, உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் கடமை. இந்த விஷயத்தில், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இயங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
12-Sep-2025