உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பழைய கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் காயம்

 பழைய கட்டடம் இடிந்து விழுந்து 3 பேர் காயம்

சென்னை: மழையின் காரணமாக பழைய கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்தனர். சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக, ஓட்டேரி, தர்கா தெரு மற்றும் ஸ்டிராஹன்ஸ் சாலை சந்திப்பில், அடுக்குமாடி கட்டடத்தில் இருந்த பிரியாணி மற்றும் டிபன் கடையின் கூரை, நேற்று இரவு 9:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பிரியாணி கடையின் உரிமையாளரான புளியந்தோப்பைச் சேர்ந்த அபிஸ், 38, டிபன் கடையின் உரிமையாளரான ஓட்டேரியைச் சேர்ந்த அயூப்கான், 40, மற்றும் இவரது மனைவி சரிபா பானு, 39 ஆகிய மூவருக்கும் தலை, கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழிலாளி 'சீரியஸ்' ரெட்ஹில்ஸ், பச்சையப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஞ்சான், 50. இவர், அண்ணாநகர், டபிள்யூ பிளாக்கில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் மூட்டைத் துாக்கும் தொழிலாளியாக பணிபுரிகிறார். இவர், நேற்று மாலை பணி முடிந்து 'ஹோண்டா யூனிகார்ன்' பைக்கில், அண்ணா நகர் மூன்றாவது மற்றும் ஐந்தாவது பிரதான சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேப்ப மரத்தின் கிளை முறிந்து, அவரது கழுத்தில் விழுந்தது. இதில் காயமடைந்தவரை அங்கிருந்தோர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை