உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு 244 பேருக்கு 3 மாத பயிற்சி

எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு 244 பேருக்கு 3 மாத பயிற்சி

சென்னை:தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து, 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு, எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.அவர்களுக்கு அடிப்படை மற்றும் நடைமுறை பயிற்சிகள் தரப்படுகிறது. அந்த வகையில், சென்னை மாநகர போலீசில், எவ்வித தண்டனையும் பெறாமல், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த, 153 ஆண்கள், 91 பெண்கள் என, சிறப்பு எஸ்.ஐ.,க்கள் 244 பேருக்கு, எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது.அவர்களுக்கான அடிப்படை பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சி, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமார் மற்றும் ஆயுதப்படை துணை கமிஷனர்கள் அன்வர் பாஷா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி, சான்றிதழ் வழங்கினர்.அடிப்படை பயிற்சி நிறைவு செய்த 244 பேரும், மூன்று மாத காலம் நடைமுறை பயிற்சி பெற, காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை