உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 3 பேர் கைது

ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 3 பேர் கைது

எண்ணுார்: ஆந்திராவில் இருந்து, ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த பெண் உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர். எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு எண்ணுார் முகத்துவார மேம்பாலம் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொன்னேரியில் இருந்து எண்ணுார் நோக்கி சென்ற ஆட்டோவை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, போலீசார் ஆட்டோவை சோதனையிட்டனர். அதில், மூன்று கிலோ கஞ்சா இருந்தது. இதில் தொடர்புடைய, காஞ்சிபுரம், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சித்ரா, 34, பாலவாக்கத்தைச் சேர்ந்த மாதவன், 26, நீலாங்கரையைச் சேர்ந்த கேசவன், 34, ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர், விசாரணைக்கு பின் மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து ஆட்டோ மூலம், கஞ்சாவை மொத்தமாக வாங்கி, சென்னை - எண்ணுார் வழியாக காஞ்சிபுரம் கொண்டு சென்று, அங்கு சில்லரை விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. சித்ரா மீது, ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி