மேலும் செய்திகள்
மாநில சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
29-Jul-2025
சென்னை:மாநில அளவிலான சதுரங்க போட்டியில், 60 சிறுமியர் உட்பட, 300 சிறுவர்கள் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். 'பீட் ஜீ' குளோபல் பள்ளி மற்றும் ஆர்.வி., செஸ் அகாடமி இணைந்து, இரண்டாவது மாநில அளவிலான சதுரங்க போட்டியை, பெருங்களத்துாரை அடுத்த வேங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி வளாகத்தில், நேற்று நடத்தினார். இதில், எட்டு, 11, 14, மற்றும் 17 வயதுக்கு உட்பட, இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம், ஆறு சுற்றுகள் வீதம், 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட, 10 மாவட்டங்களைச் சேர்ந்த, 60 சிறுமியர் உட்பட, மொத்தம் 300 சிறுவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை மிகுந்த உற்சாகத்துடன் வெளிப் படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 15 பேருக்கும் பரிசுகள் வழங்கப் படுகின்றன. 'இப்போட்டி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்கும் இளம் சதுரங்க வீரர்களுக்கு, இந்த அளவிலான அனுபவங்கள் நிச்சயமாக பலனளிக்கக்கூடும்' என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
29-Jul-2025