மாநில ஜிம்னாஸ்டிக் 300 சிறுவர்கள் பங்கேற்பு
சென்னை :மாநில அளவிலான 'ஜிம்னாஸ்டிக்' போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, வேளச்சேரியில் நேற்று துவங்கியது. போட்டியில், 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், ஆர்டிஸ்டிக் பிரிவில், ஆறு, எட்டு மற்றும் 10 வயதுக்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. அதேபோல, அனைத்து வயதினருக்கும், டிராம்போலைன், டம்பிளிங், அக்ரோபாட்டிக் ஆகிய வகைகளில் போட்டிகள் இருபாலருக்கும் நடக்கின்றன. ஒவ்வொரு வகையான போட்டிகளிலும், புள்ளிகள் அடிப்படையில் , பலருக்கு முதலிடங்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, நேற்று மாலை வரை, ஆறு, எட்டு மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான போட்டிகள் மட்டும் நிறைவடைந்து, பரிசுகள் வழங்கப்பட்டன. மற்ற போட்டிகள் இன்று நடக்கின்றன. போட்டியில் தேர்வாவோர், தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற உள்ளனர்.