உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில கராத்தே போட்டி 300 மாணவர்கள் உற்சாகம்

மாநில கராத்தே போட்டி 300 மாணவர்கள் உற்சாகம்

சென்னை: எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் வடபழனி வளாகத்தில் நடந்த, மாநில கராத்தே போட்டியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர். சென்சாய் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி, ஜப்பான் சென்சு கராத்தே டோ இந்தியா மற்றும் எஸ்.ஆர்.எம்., விளையாட்டு இயக்குநகரம் இணைந்து, மாநில கராத்தே போட்டியை, வடபழனி வளாகத்தில் நேற்று முன்தினம் நடத்தியது. போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 300 மாணவ - மாணவியர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்வில், பல்கலையின் விளையாட்டுத்துறை இயக்குநர் மோகனகிருஷ்ணன் கூறுகையில், ''போட்டியில் பங்கேற்ற மாணவர்கள், 2036 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் தயாராக வேண்டும்,'' என்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அமீரக ஷிட்டோ ர்யூ கராத்தே கூட்டமைப்பின் தலைவர் மயில்வாகனம் பரிசுகளை வழங்கினார். வட பழனி வளாக உடற்கல்வி இயக்குநர் தேன்மொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை