உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த 4 பேர் கைது

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த 4 பேர் கைது

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு, ரிச்சி தெரு - சியாலி அம்மன் கோவில் தெரு சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, அவர்களின் வாகனத்தை சோதனை செய்தனர்.இதில், போதை மாத்திரைகளும், கஞ்சாவும் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், பெரம்பூரைச் சேர்ந்த சரத்குமார், 32, சேரமான், 25, என்பது தெரியவந்தது.தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார், ஓட்டேரியைச் சேர்ந்த மகேஷ், 35, முகமது சாதிக், 30, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 3.5 கிலோ கஞ்சா, 200 போதை மாத்திரைகள், 4 மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ