மேலும் செய்திகள்
சூளைமேடில் மயங்கிய ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு
16-Jul-2025
சென்னை, சென்னையில் வெவ்வேறு சம்பவங் களில், மின்சாரம் பாய்ந்து சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். திருவேற்காடு, அருள் நகரைச் சேர்ந்தவர் கார்த்தி, 45; ஆட்டோ ஓட்டுநர். இவரது இளைய மகன் ஹரிஷ், 10. இவர், அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டருகே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தாகம் எடுக்கவே, அங்கிருந்த ஆள் இல்லாத வீட்டின், மின் மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், ஹரிஷை மீட்டு வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று காலை உயிரிழந்தார். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர். மீன் வியாபாரி பலி -திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் முருகன், 21. மீன் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணியளவில், கடையை மூடிக் கொண்டிருந்தார். அப்போது, மீன் பதப்படுத்த வைத்திருந்த ஐஸ் கட்டி உருகி, நீரானது மின் ஒயரை சூழந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். கடையில் இருந்தவர்கள், முருகனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில், முருகன் இறந்தது தெரியவந்தது. அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். முதியவர் மரணம் திருமுல்லைவாயல், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன், 64. இவர், சிறிய லாரி வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். நேற்று காலை, திருமுல்லைவாயில், அன்னை சத்யா நகரில், வட மாநிலத்தவர் தங்கியுள்ள வீட்டின் சிறிய பிளாஸ்டிக் தொட்டியில் குடிநீர் ஏற்றும் பணியில் ஈடுபட்டார். அந்நேரம், லாரியில் உள்ள மின் மோட்டாரில், மின் இணைப்பு கொடுத்தபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொழிற்சாலை ஊழியர் சேலையூர் அடுத்த காமராஜபுரம், வேம்புலி நகரைச் சேர்ந்தவர் அஸ்வின், 35; தொழிற்சாலை ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வீட்டின் அருகே உள்ள பேக்கரி கடைக்கு சென்றார். க டை அருகேயுள்ள மின் கம்பத்தை ஒட்டி, வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கினார். அப்போது, மின் கம்பத்தின் மீது அவரது கை உரசியதில், மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் கீழே விழுந்தவரை கடையில் இருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அஸ்வின் உயிரிழந்ததாக தெரிவித்தனர். சேலையூர் போலீசார் விசா ரிக்கின்றனர்.
16-Jul-2025