உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 400 காவலர் குடியிருப்புகள் பெரும்பாக்கத்தில் அமைகிறது

400 காவலர் குடியிருப்புகள் பெரும்பாக்கத்தில் அமைகிறது

சென்னை,காவல்துறை சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.புனித தோமையார்மலை நடந்த விழாவில், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பங்கேற்று காவலர் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.பின், அவர் பேசியதாவது:காவல் துறையினர், பண்டிகை நாட்களில் கட்டாயம் பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஆகையால், நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, இதுபோன்ற தமிழக பாரம்பரிய விழாக்களை நாம் குடும்பத்துடன் நடத்தி சந்தோஷப்பட வேண்டும்.காவலர்களுக்கு மிகப்பெரிய சவால் சென்னையில் வீடு கிடைப்பது தான். வாடகையும் அதிகம் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசு ஒருங்கிணைந்த திட்டத்தின் படி, 200 கோடி ரூபாய் மதிப்பில், 400 காவலர் குடியிருப்புகள் பெரும்பாக்கத்தில் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் உள்ளிட்ட அதிகாரிகள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை