மேலும் செய்திகள்
பைக் திருடிய இருவர் கைது
14-Jan-2025
எம்.ஜி.ஆர். நகர், எம்.ஜி.ஆர்., நகர், நெடுஞ்செழின் தெரு, கே.கே.நகர் சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை, போலீசார் மடக்கி சோதித்தனர். அப்போது, அவரிடம் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தங்கவேல், 56, என்பது தெரிந்தது. அவர் அளித்த தகவல்படி, கெருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 450 கிலோ குட்கா உட்பட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.அவரிடமிருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், தங்கவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
14-Jan-2025