உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்வாயில் மண் கொள்ளை 5 பேர் கைது

கால்வாயில் மண் கொள்ளை 5 பேர் கைது

குன்றத்துார், குன்றத்துார் அருகே, வரதராஜபுரம் ஊராட்சியை கடந்து செல்லும் அடையாறு ஆற்று கால்வாயில், சவுடு மண் அள்ளுவதாக, மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து போலீசார், நேற்று காலை, அங்கு ரோந்து சென்றனர். அப்போது, மண் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு டாரஸ் லாரிகள், இரண்டு பொக்லைன் இயந்திரங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.மண் கொள்ளையில் ஈடுபட்ட தாம்பரத்தைச் சேர்ந்த ராஜா, 45, வரதராஜபுரத்தைச் சேர்ந்த அருள், 38, உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை