உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரத்தில் இருந்து 5 விரைவு ரயில் இயக்கம்

தாம்பரத்தில் இருந்து 5 விரைவு ரயில் இயக்கம்

சென்னை :எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணி காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் ஐந்து ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தில், புதிய நடைமேம்பாலம், நடைமேடைகளில் பயணியருக்கு வசதிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணி, 735 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இதனால், எழும்பூரில் இருந்து செல்லும் சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூர் - திருச்சி ராக்போர்ட், எழும்பூர் - மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன், எழும்பூர் - ராமேஸ்வரம் சேது விரைவு ரயில், எழும்பூர் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்தும், எழும்பூர் - மும்பை விரைவு ரயில், கடற்கரையில் இருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரும் 10 முதல் நவ., 10ம் தேதி வரை இருக்கும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !