உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் விற்ற 5 பேர் ைகது

போதை பொருள் விற்ற 5 பேர் ைகது

அசோக் நகர்: அசோக் நகர் போலீசார், கடந்த 29ம் தேதி, மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை மடக்கி விசாரித்தனர்.விசாரணையில் பிடிபட்டவர்கள், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நயிமுல்ஹக், 31, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல் பிரின்ஸ், 35 என, தெரியவந்தது.அவர்களிடம் இருந்து, 10 கிராம் மெத் ஆம் பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல், அசோக் நகர் 4வது அவென்யூ மற்றும் 100 அடி சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமாக நின்ற மூவரை மடக்கி விசாரித்தனர்.பிடிபட்டவர்கள், பெங்களூரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 30, விக்டர் வேட், 31, ராஜஸ்தானைச் சேர்ந்த புஷ்பேந்திரா சிங், 24, என, தெரியவந்தது.இவர்களிடம் இருந்து, 59 கிராம் மெத் ஆம் பெட்டமைன் போதை பொருள் மற்றும் 32,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை