சென்னை - தாம்பரம் தடத்தில் இன்று 59 ரயில்கள் ரத்து 20 நிமிடத்துக்கு ஒரு சிறப்பு ரயில்
சென்னை, தாம்பரம் யார்டில் நடைமேம்பால கட்டுமானப்பணி நடப்பதால், சென்னை கடற்கரை -- தாம்பரம் தடத்தில், இன்று 59 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 20 நிமிடத்துக்கு ஒரு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:தாம்பரம் யார்டில், புதிய நடைமேம்பால கட்டுமானத்துக்கான இரும்பு துாண்கள் நிறுவும் பணி நடப்பதால், மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - - தாம்பரம் இடையே இன்று காலை 7:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வழக்கமாக செல்லக்கூடிய 59 மின்சார ரயில்களின் சேவை, ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், சென்னை கடற்கரை - - செங்கல்பட்டு இடையே காலை 7:00 மணி முதல் காலை 11:00 மணி வரை இருமார்க்கமாகவும், வழக்கம் போல மின்சார ரயில் சேவை இயக்கப்படும். சென்னை கடற்கரை - பல்லாவரத்துக்கு இன்று காலை 6:15, 6:45, 7:15, 7:50, 8:30, 9:05, 9:45, 10:15, 10:40, முற்பகல் 11:05, 11:30, 11:55, நண்பகல் 12:20, மதியம் 1:10, 1:35, 2:00, பிற்பகல் 2:25, 2:45 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் பல்லாவரம் -- சென்னை கடற்கரைக்கு காலை 7:10, 7:40, 8:10, 8:45, 9:25, 10:00, 10:35, முற்பகல் 11:10, 11:30, 11:55, நண்பகல் 12:20, 12:45, மதியம் 1:10, 1:35, 2:00, 2:25, 2:50, மாலை 3:20, 3:50 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இருமார்க்கத்திலும், தலா 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன இதுதவிர, கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே ஒன்பது சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் மாலை 4:00 மணிக்கு பிறகு, அனைத்து ரயில்களும் ஞாயிறு அட்டவணைப்படி ஓடும்.
பயணியர் ரயில்களும் ரத்து
தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், விழுப்புரம் - தாம்பரம் மதியம் 1:40 மணி ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன விழுப்புரம் - தாம்பரம் அதிகாலை 5:20 மணி ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் தாம்பரம் - விழுப்புரம் மாலை 6:05 மணி ரயில், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும்
பயணியர் அதிருப்தி
பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், இன்று ஷாப்பிங் செல்ல பலரும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்வது, பயணியருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டோ, கால்டாக்சிகளில் சாதாரண நாட்களிலேயே, பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் நிலையில், மின்சார ரயில்கள் ரத்து செய்து இருப்பது, மேலும் கூடுதல் கட்டண வசூலிக்க வழி வகுக்கும் என பயணியர் தெரிவித்துள்ளனர்.