உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமோனியா கசிந்த ஆலையை மூட கோரி 5ம் நாளாக போராட்டம்

அமோனியா கசிந்த ஆலையை மூட கோரி 5ம் நாளாக போராட்டம்

திருவொற்றியூர்:அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரி, எண்ணுார் மக்கள் பாதுகாப்பு குழுவினர், ஐந்தாவது நாளாக போராடி வருகின்றனர்.எண்ணுார், பெரியகுப்பத்தில் இயங்கிய 'கோரமண்டல் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்' உரத் தொழிற்சாலையில், இறக்குமதி குழாயில் ஏற்பட்ட அமோனியா கசிவால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 33 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.தவிர, 50க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.இந்நிலையில், ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்த நிலையில், தற்காலிகமாக ஆலையை மூட, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் ஒட்டியது. இருப்பினும், நிரந்தரமாக மூடக்கோரி, பெரியகுப்பம் பகுதியில் ஆலை வாயிலை முற்றுகையிட்டு, எண்ணுார் மக்கள் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த, பாதிக்கப்பட்ட மக்கள், ஐந்தாவது நாளாக போராடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி