உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்ட்ரலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்ட்ரலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, மே 20-கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் தொடர்பாக, சென்னை அயப்பாக்கத்தில் செயல்படும் என்.சி.பி., எனும் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மோப்ப நாய் உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று சோதனை நடத்தினர்.அப்போது, அங்கு கேட்பாரற்று கிடந்த பையில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.இதை பறிமுதல் செய்து, சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி