உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு தருவதாக 200 பேரிடம் மோசடி செய்த 6 பேர் கைது

வீடு தருவதாக 200 பேரிடம் மோசடி செய்த 6 பேர் கைது

சென்னை குடிசைமாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக, 200 பேரிடம் இருந்து, ஐந்து கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த, ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அண்ணாநகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 45. இவரிடம், குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாக, பரணிதரன் உள்ளிட்டோர், 3.50 லட்சம் ரூபாய் பெற்றனர். வீடு ஒதுக்கீடுக்கான போலி ஆணைகளை கொடுத்தனர். இதையறிந்த முத்துலட்சுமி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட அயனாவரத்தைச் சேர்ந்த பரணிதரன், 46, சேத்துப்பட்டை சேர்ந்த ரோகிணி பிரியா, 49, அப்துல் நாசர், 40, ரேவதி, 40, கஜேந்திரன், 38, அவரது மனைவி சாமுண்டிஸ்வரி, 39 ஆகிய ஆறு பேரை நேற்று கைது செய்தனர். கைதான கஜேந்திரன், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை நன்கு தெரியும் எனவும், பணம் கொடுத்தால் வீடு ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகவும் கூறி, 200 பேரிடம் இருந்து, ஐந்து கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ