உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிலாளர்கள் அறையில் 6 போன், பணம் திருட்டு 

தொழிலாளர்கள் அறையில் 6 போன், பணம் திருட்டு 

பெரம்பூர், வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 45; மேஸ்திரி. இவர், பெரம்பூர் ஆனந்தவேலு தெருவில் கட்டுமான பணி மேற்கொண்டு வருகிறார். அவருடன், 10க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி பணி புரிகின்றனர்.தொழிலாளர்கள் அனைவரும், வேலை முடித்து நேற்று முன்தினம் இரவு துாங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் எழுந்து பார்த்தபோது, வேலை செய்யும் நபர்களின் ஆறு மொபைல்போன்கள் மற்றும் பணத்துடன் மணிபர்ஸ் திருட்டு போயிருந்தது.இது குறித்து சம்பத்குமார் செம்பியம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை