உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 674 சேதமடைந்த மின் பெட்டிகள் ஒரு வாரத்திற்குள் சரிசெய்ய உத்தரவு

674 சேதமடைந்த மின் பெட்டிகள் ஒரு வாரத்திற்குள் சரிசெய்ய உத்தரவு

சென்னை, அடுத்தடுத்து ஏற்படும் மின் விபத்துக்களால், சென்னை மற்றும் புறநகரில் சேதமடைந்த 674 மின் வினியோக பெட்டிகள் உள்ளிட்ட மின் சாதனங்களை, இம்மாத இறுதிக்குள் சரி செய்யுமாறு பிரிவு அலுவலக பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பல இடங்களில் மின் வினியோக பெட்டிகள் கதவு இல்லாமல், ஒயர்கள் வெளியில் தெரியும்படி உள்ளன. மின் கம்பி அறுந்து விழும் நிலையில் தாழ்வாக தொங்குகின்றன. இதனால் பலத்த காற்று மற்றும் மழையின் போது மின் கம்பி அறுந்து விழுவதால், விபத்துகள் நிகழ்கின்றன. சென்னை கண்ணகி நகர் பகுதியில், கடந்த சனிக்கிழமை காலை, சாலையில் தேங்கிநின்ற மழைநீரில் பழுதடைந்த மின் கேபிளில் மின்சாரம் பாய்ந்து துாய்மை பணியாளர் வரலட்சுமி என்பவர் உயிரிழந்தார். அதற்கு முந்தைய நாள், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் என்பவர், மழை நீரில் மின் கம்பி அறுந்து விழுந்திருந்ததை கவனிக்காமல் சென்றதால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவங்களால் மின் வாரியம் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 'மின் வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் நிகழ்கின்றன' என, எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தன. இந்நிலையில், சென்னையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள, 674 சேதமடைந்த மின் வினியோக பெட்டிகள், கம்பங்களை சீரமைப்பதுடன், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சரிசெய்யும் பணிகளை இம்மாதத்திற்குள் முடிக்குமாறு பிரிவு அலுவலக பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. பணிகளின் நிலை குறித்த விபரங்களை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. *


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை