உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடலில் மூழ்கிய விசைப்படகு மீனவர்கள் 7 பேர் தப்பினர்

கடலில் மூழ்கிய விசைப்படகு மீனவர்கள் 7 பேர் தப்பினர்

எண்ணுார், சென்னை, காசிமேடைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான விசைப்படையில், நேற்று முன்தினம், ஆந்திராவைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.எண்ணுார் கடற்பகுதியில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகில் திடீரென துளை ஏற்பட்டு, கடல் தண்ணீர் படகில் உட்புகுந்தது. சிறிது நேரத்தில் படகு படிப்படியாக மூழ்க ஆரம்பித்தது. சுதாரித்த மீனவர்கள் கடலில் குதித்து நீந்தி கரை சேர்ந்தனர். அதேநேரம், மூழ்கிய படகை, வேறு விசைப்படகு வாயிலாக கயிறு கட்டி இழுத்து காசிமேடு துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை