மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
27-Sep-2025
பெரும்பாக்கம், பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் முருகன், 52; தனியார் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. இவரின் மகன் விஷ்வராஜனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று மாலை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்தது. அதில் பங்கேற்ற முருகன், நிகழ்ச்சி முடிந்து இரவு 12:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து, 7.5 சவரன் நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Sep-2025