உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜின் 750வது ஜெயந்தி மகோத்சவம்

மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜின் 750வது ஜெயந்தி மகோத்சவம்

சென்னை : மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜின் 750வது ஜெயந்தி மகோத்சவம், வரும் 16ம் தேதி அடையாறில் நடக்க உள்ளது. விஷ்வ மாவுலி ஞானேஷ்வர் மஹாராஜ், ஞானேஷ்வர் அல்லது ஞானதேவர் என அறியப்படுகிறார். இவர், ஞானேஷ்வரி என்ற பெயரில் பகவத் கீதைக்கு எழுதிய விளக்க உரை, பல தலைமுறைகளாக பரம் பொருளை அடைய துடிப் போரை ஆன்மிகப் பாதையில் ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், இவரது 750வது ஜெயந்தி மகோத்சவம், கிருஷ்ண ஜெயந்தி நாளான வரும் 16ம் தேதி அடையாறு, அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் நடக்க உள்ளது. தமிழக கவர்னர் ரவி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், vishwavarakarisamsthan.comஎன்ற இணையதளத்தில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 99524 39670, 98848 59972 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். ஸ்ரீதுகாராம் கணபதி மஹாராஜின் வழிகாட்டுதல்படி, ரகுநாத்தாஸ் மஹாராஜ் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் விஷ்வ வாரகரி சமஸ்தானம், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ