உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொதட்டூர்பேட்டை, மீஞ்சூரில் 89 சவரன் நகை திருட்டு

பொதட்டூர்பேட்டை, மீஞ்சூரில் 89 சவரன் நகை திருட்டு

பொதட்டூர்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை, கொத்தகுப்பத்தைச் சேர்ந்தவர் விஜயலு, 66.இவர், நேற்று காலை தன் குடும்பத்துடன், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் உள்ள உறவினரின் ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக சென்றார்.மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த தங்க 71 சவரன் நகைகள் மற்றும் 70,000 ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல், மீஞ்சூர் அடுத்த சீமாவரத்தைச் சேர்ந்தவர் விநாயகம், 42; ஆட்டோ ஓட்டுனர். கணவன், மனைவி இருவரும், நேற்று வெளியில் சென்றனர்.மதியம் 12:00 மணிக்கு, சாந்தி வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 18 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. இது குறித்து சாந்தி புகாரின்படி, மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை