உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்கம்பி அறுந்து 9 எருமை பலி

மின்கம்பி அறுந்து 9 எருமை பலி

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், அன்னாத்துார் கிராமத்தைச் சேர்ந்த கால்நடை பராமரிப்போர், நேற்று, தங்களது மாடுகளை வழக்கம் போல மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர்.அப்பகுதி விவசாய நில மின்மோட்டார்களுக்கு செல்லும் மின்கம்பி அறுந்து தரையில் விழுந்து கிடந்தது.இதை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து அன்னாத்துார் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், 44, என்பவருக்கு சொந்தமான ஐந்து எருமைகள், நந்தகுமார், 36, என்பவருடைய மூன்று எருமைகள், டில்லிபாபு 40, என்பவரது ஒரு எருமை என, ஒன்பது எருமைகள் உயிரிழந்தன. இது குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை