இன்ஸ்பெக்டர்கள் 9 பேர் இட மாற்றம்
சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன், வேளச்சேரி - சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், சந்தோஷ்குமார் பெரியமேடு குற்றப்பிரிவிற்கும் என, ஒன்பது இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பிறப்பித்தார்.