உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசுக்கு 24 ஆண்டு தண்ணி காட்டியவர் கைது

போலீசுக்கு 24 ஆண்டு தண்ணி காட்டியவர் கைது

சென்னை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 44. இவர், கடந்த 2000ல் திருமங்கலம் பகுதியில், தள்ளுவண்டி கடையில் பழக்கடை நடத்தினார்.அப்போது, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மர்ம நபர் 100 ரூபாய் பறித்து தப்பினார். இந்த வழக்கில், ஓட்டேரியைச் சேர்ந்த கணேஷ் என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியில் வந்த கணேஷ், 24 ஆண்டுகளாக, நீதமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.இதையடுத்து, திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் தலைமையிலான போலீசார், கணேசனை தேடி வந்தார். இந்நிலையில், நேற்று காலை கீழ்ப்பாக்கம், ஈகா திரையரங்கம் அருகில் சுற்றித்திரிந்த கணேசன், 44, என்பவரை போலீசார் சுற்றிவளைத்தனர்.அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை