உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை நடுவே தீப்பிடித்து எரிந்த கார்

சாலை நடுவே தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை, வடபழனியில், சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.மண்ணடி பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதர்ஷா, 43. இவர், முகமது நசீப் என்பவருடன் நேற்று இரவு, வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடி நோக்கி,'ஸ்விப்ட் டிசையர்' காரில் சென்றார்.வடபழனி ஆற்காடு சாலை கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளி எதிரே சென்ற போது, காரில் இருந்து புகை வந்துள்ளது.உடனே, காரை சாலையோரம் நிறுத்தி விட்டு, இருவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில், காரில் மளமளவென தீ பரவியது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த அசோக் நகர் தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.ஆனாலும், கார் முற்றிலும் எரிந்து நாசமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை