மேலும் செய்திகள்
'டாஸ்மாக்'கில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு
01-Oct-2024
தரமணி, தரமணி, அகஸ்தியர் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ், 24; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மாலை, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பின், தரமணி பேருந்து நிலையம் அருகே உள்ள குளத்தில் குளித்தார். ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நீச்சல் அடித்து சென்றார். நடுப்பகுதியில் செல்லும்போது, சோர்வடைந்த பிரகாஷ், நீரில் மூழ்கி பலியானார். நண்பர்கள் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. திருவான்மியூர் தீயணைப்பு படையினர், பல மணி நேரம் போராடி பிரகாஷின் உடலை மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். தரமணி போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Oct-2024