கால்வாயில் குப்பை ரூ.2 லட்சம் அபராதம்
சென்னை,பருவமழையை முன்னிட்டு, கொடுங்கையூர், கேப்டன் காட்டன், வியாசர்பாடி உள்ளிட்ட கால்வாய்களில் துார்வாரும் பணி நடக்கிறது.மீறி குப்பை கொட்டுவோரை கண்காணிக்க, மாநகராட்சி வடக்கு வட்டார துணை கமிஷனர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.நேற்று, இந்த குழு நடத்திய சோதனையில், கால்வாயில் குப்பை கொட்டிய வீடு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.