உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சாலையோர குப்பைக்கு வைத்த தீ சரக்கு வாகனம் எரிந்து நாசம்

 சாலையோர குப்பைக்கு வைத்த தீ சரக்கு வாகனம் எரிந்து நாசம்

அம்பத்துார்: அம்பத்துார், அத்திப்பட்டு, குப்பம் பகுதியில், நேற்று காலை, பொதுமக்கள் சாலையோரம் குப்பையை கொட்டி தீ வைத்து எரித்ததாக தெரிகிறது. அந்த தீயானது, அருகில் இருந்த பழக்கடை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 'டாடா ஏஸ்' மினி லோடு வாகனத்திலும் பரவியது. கொழுந்து விட்டு எரிந்த தீ, மின் கம்பியில் பரவி அறுந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். அதற்குள், பழக்கடையில் இருந்த 50,000 ரூபாய்க்கும் மேல் மதிப்புடைய பழங்கள், 'டாடா ஏஸ்' வாகனம் மற்றும் அங்கிருந்த மின் கம்பமும் தீக்கிரையாகின. குப்பையில் இருந்து பரவிய தீயா அல்லது நாச வேலையா என, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை