உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆணழகனாக அசத்திய வீரர்

ஆணழகனாக அசத்திய வீரர்

சென்னை, திருவள்ளூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்பகுதி சங்கம் மற்றும் தி.மு.க., வடகிழக்கு மாதவரம் வடக்கு பகுதி சார்பில், மாவட்ட ஆணழகன் போட்டி, வடபெரும்பாக்கத்தில் நடந்தது. 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில், ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த குறைந்த உயரம் கொண்ட பூமிநாதன், 26, என்பவர் பங்கேற்றார்.இவர், கட்டுடலைக் காட்டி, பார்வையாளர்களை வியக்க வைத்து, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை வென்று அசத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை