உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணி செய்த நிறுவனத்தில் ஆட்டை போட்டவர் கைது

பணி செய்த நிறுவனத்தில் ஆட்டை போட்டவர் கைது

கே.கே., நகர், சாலிகிராமம் ஆற்காடு சாலையில், ஆன்டர்சன் டயக்னோஸ்டிக் சர்வீசஸ் என்ற தனியார் ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில், கோவூரை சேர்ந்த சரவணன், 53, என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இவர், எந்நேரமும் மது அருந்தி வந்ததால், கடந்த 18ம் தேதி வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அன்று இரவு, மது போதையில், சரவணன் ஆய்வகத்திற்கு சென்றுள்ளார்.இரவு பணியில் இருந்த ஊழியர்களுக்கு, சரவணனை பணியை விட்டு நீக்கியது தெரியவில்லை என, கூறப்படுகிறது. காசாளர் அருகே நின்று பேசிய சரவணன், அவருக்கு தெரியாமல், 10,000 ரூபாயை எடுத்து சென்றார். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி நந்தகுமார் அளித்த புகாரின்படி, கே.கே., நகர் போலீசார் சரவணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 10,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி