உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டவரில் ஏறி மிரட்டல் விடுத்த வடமாநில நபரால் சலசலப்பு

டவரில் ஏறி மிரட்டல் விடுத்த வடமாநில நபரால் சலசலப்பு

குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியம், காசநோய் மருத்துவமனை வளாகத்தில், தாம்பரம் மாநகராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அங்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனிஷா பதன், 22, என்பவர், வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சக தொழிலாளர்கள் தன்னை தாக்க வருவதாக, மேஸ்திரியிடம் மனிஷா பதன் கூறியுள்ளார். இது தொடர்பாக மேஸ்திரி விசாரித்ததில், யாரும் தாக்கவில்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில், அந்த நபர், குரோம்பேட்டை, அம்பேத்கர் நகர், மீனாட்சி அம்மன் தெருவில் உள்ள, 40 அடி உயர மின் டவரில் ஏறி, மிரட்டல் விடுத்தார். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து, சக தொழிலாளர்களை பேச வைத்து, மனிஷா பதனை பாதுகாப்புடன் கீழே இறக்கினர். விசாரணையில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ