உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வித்யா மந்திர் பள்ளியில் நாளை இயற்கை உழவர் சந்தை நடக்குது

வித்யா மந்திர் பள்ளியில் நாளை இயற்கை உழவர் சந்தை நடக்குது

சென்னை; சென்னை, வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள அர்ஷ வித்யா மந்திர் பள்ளியில், இயற்கை உழவர் சந்தை நாளை நடத்தப்படுகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு, ஓ.எப்.எம்., எனும் சென்னை ஆர்கானிக் மார்க்கெட் இணைந்து, இயற்கை உழவர் சந்தையை, கிண்டி - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள அர்ஷ வித்யா மந்திர் பள்ளியில், நாளை காலை 10:00 மணிக்கு துவக்குகின்றன. இயற்கை வேளாண் கூட்டமைப்பின் அனந்து கூறியதாவது: இந்த சந்தையின் முக்கிய நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலையில காய்கறி மற்றும் பொருட்களை வழங்குவதுதான். உழவர் சந்தையில் இயற்கை விவசாயிகள், மகளிர் குழுக்கள், சமூக நிறுவனங்கள் ஆகியோர் மூலம் 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. சந்தையில் இயற்கை காய்கறி, 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், பழங்கள், 'ஆர்கானிக்' மளிகை பொருட்கள், 10க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள் உள்ளிட்டவை விற்கப்படும். இயற்கை வேளாண்மை, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து முக்கிய நிபுணர்களின் அமர்வுகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் குழந்தைகளுக்கான அரங்குகளும் இடம்பெற்றிருக்கும். வாடிக் கையாளர்கள் பிளாஸ்டிக் அல்லாத பைகளை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை