புது நிழற்குடை இரும்புலியூரில் தயாராகுது
தாம்பரம்: தாம்பரம், இரும்புலியூரில், பயணியர் வசதிக்காக, ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, புதிய பேருந்து நிழற்குடை அமைக்கப்படுகிறது. தாம்பரம் அடுத்த இரும்புலியூரில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து, ஏராளமனோர் பேருந்துகள் வாயிலாக பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இந்நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் உட்காரக்கூட இடம் இல்லாமல், பெண்கள், முதியவர்கள் நீண்ட நேரம் நின்றபடியே பேருந்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, பழைய நிழற்குடை அருகே பொதுமக்களுக்கு ஏற்ற வகையில், புதிய நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.