பக்கவாத பாதிப்புக்கு புதிய முறையில் தீர்வு
சென்னை: பக்கவாதம் மற்றும் நாள்பட்ட வலிக்கு, அறுவை சிகிச்சையற்ற புதிய முறையில், வி.எஸ்., மருத்துவமனை டாக்டர்கள் தீர்வு அளித்துள்ளனர். இதுகுறித்து, மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவ ஆலோசகர் எல்.சிந்துஜா மற்றும் டாக்டர்கள் கூறியதாவது: பக்கவாதம் மற்றும் நாள்பட்ட வலிக்கு, அறுவை சிகிச்சையின் வாயிலாக தான் தீர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், 'டிரான்ஸ்கிரேனியல் மேக்னெட்டிக் ஸ்டிமுலேஷன்' என்ற டி.எம்.எஸ்., எனும் புதிய முறையில் தீர்வு ஏற்படுத்த முடியும் என்பதை கண்டறிந்துள்ளோம். இது, காந்த அலை துடிப்பை பயன் படுத்தி, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் துாண்டி, அதன் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவும். இந்த முறையில், பார்கின்சன் நோய், பக்கவாதத்தால் ஏற்படும் பேச்சு மற்றும் இயக்க பிரச்னைகள், நாள்பட்ட வலி, ஒற்றை தலைவலி, மனசோர்வு, ஓ.சி.டி., மற்றும் பதற்றம் தொடர்பான பாதிப்பு களுக்கும் சிகிச்சை அளிக்க முடியும். இது, அறுவை சிகிச்சையின் நோயை குணப்படுத்தக் கூடிய பாதுகாப்பான முறையாகும். இவ்வாறு அவர் கள் கூறினர்.