உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணநாளில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்

மணநாளில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்

திரு.வி.க.நகர், காலையில் திருமணம் நடந்த நிலையில், மாலையில் புதுப்பெண் காதலனுடன் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அகிலன் - நாகவள்ளி தம்பதியின் மகள் அர்ச்சனா, 20. இவருக்கும், மாதவரம் பர்மா காலனியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும், நேற்று முன்தினம் பெசன்ட் நகர் சர்ச்சில் திருமணம் நடந்தது.மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.அகிலன் வீட்டிற்கு மணமக்கள் வந்த நிலையில், மணமகளான அர்ச்சனா 'பியூட்டி பார்லர்' செல்வதாக கூறி, வீட்டில் இருந்து வெளியே கிளம்பியுள்ளார். வெகு நேரமாகியும் திரும்பி வராத நிலையில், நண்பர்களிடம் விசாரித்தபோது, அர்ச்சனா தான் காதலித்த எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கலையரசன் என்பவருடன் சென்றது தெரிய வந்தது.மகளை மீட்டுத்தரக் கோரி, திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் நாகவள்ளி புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natarajan Ramanathan
ஜூலை 04, 2025 04:54

விஜயகுமார் உயிரோடு இருக்கவேண்டுமானால் அர்ச்சனாவை கலைஅரசனுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும். வேறு வழியே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை