ரூ.10 லட்சத்தில் மெரினாவில் விளையாட்டு திடல்
சென்னை: சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும், தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு, சிறுவர்கள் விளையாடுவதற்கென முறையான பூங்கா வசதி இல்லை.இந்நிலையில், மெரினா நீச்சல் குளம் அருகே, 10 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க, மாநகராட்சி முடிவு செய்தது.அதற்கான பணி துவங்கி, ஊஞ்சல், சறுக்கு தளம் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்தில் சிறுவர் விளையாட்டு பூங்காவை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.