பைக்கில் மோதிய வேன் தனியார் ஊழியர் பலி
கோயம்பேடு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பூபாலன், 24. இவர், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, 'பைக்'கில் வீடு திரும்பினார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெற்குன்றம் அருகே சென்ற போது, பின்னால் வந்த லோடு வேன், இவரது பைக் மீது மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட பூபாலன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து ஏற்படுத்திய லோடு வேன் ஓட்டுனர் அய்னுல், 29, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.