உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சைக்கிளில் டீ விற்கும் நபர் பைக் மோதி உயிரிழப்பு

சைக்கிளில் டீ விற்கும் நபர் பைக் மோதி உயிரிழப்பு

புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, அசோக் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சேசு பாண்டியன், 40. இவர், காசிமேடு விரைவு சாலை பகுதியில் சைக்கிளில் டீ விற்பனை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.வழக்கம்போல், நேற்று காசிமேடு விரைவு சாலையில் கன்டெய்னர் லாரி டிரைவர்களுக்கு, டீ விற்பனை செய்ய, சேசு பாண்டியன் காசிமேடு, எஸ்.என்.செட்டி சாலையில் சைக்கிளில் சென்றபோது, அவ்வழியே வேகமாக வந்த பைக் மோதி கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.காசிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்தி தப்பி சென்ற வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா, 21, என்பவரை தேடி வருகின்றனர்.பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த அமீர், 21, என்பவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ