உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓரினச்சேர்க்கையால் விபரீதம் நண்பனை கொன்று வாலிபர் தற்கொலை

ஓரினச்சேர்க்கையால் விபரீதம் நண்பனை கொன்று வாலிபர் தற்கொலை

நொளம்பூர், அமைந்தகரை எம்.எம்., காலனியைச் சேர்ந்தவர் லோகேஷ், 26; தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர், அம்பத்துார் கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன், 24. இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணி புரிந்தார்.இருவரும் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த பெற்றோர், இருவரையும் கண்டித்துள்ளனர்.நேற்று முன்தினம் இருவரும் பணி முடிந்து வீடு திரும்பாத நிலையில், அமைந்தகரை மற்றும் அம்பத்துார் காவல் நிலையங்களில், இருவரின் பெற்றோரும் புகார் அளித்தனர்.இந்த நிலையில், 9ம் தேதி இரவு வாஞ்சிநாதன் தன் அக்காவின் மொபைல் போனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில், லோகேஷை கொலை செய்து, நானும் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்திருந்தார்.இதையடுத்து, வாஞ்சிநாதனின் மொபைல் போன் டவரை போலீசார் ஆய்வு செய்ததில், முகப்பேர் மேற்கு பன்னீர் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் உள்ளது தெரியவந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு சென்ற நொளம்பூர் போலீசார், விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அப்போது, லோகேஷ் 'டிராக் பேன்ட் லேசால்' கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையிலும், வாஞ்சிநாதன் மின் விசிறியில், போர்வையால் துாக்கிட்டும் தற்கொலை செய்து காணப்பட்டார்.இதையடுத்து, இருவரது உடலையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், லோகேஷிற்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், அவர் வாஞ்சிநாதனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.இதனால், தனக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில், லோகேஷை கொலை செய்து, வாஞ்சிநாதன் தற்கொலை செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை