உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெருங்களத்துாரில் அட்டகாசம் சைக்கோ வாலிபர் கைது

பெருங்களத்துாரில் அட்டகாசம் சைக்கோ வாலிபர் கைது

பெருங்களத்துார், தாம்பரம் அடுத்த புது பெருங்களத்துாரில், 57, 58வது வார்டுகளில், புத்தர் நகர், திருவள்ளுவர் தெரு உள்ளன.இப்பகுதிகளில், சைக்கோ வாலிபர் ஒருவர், வீட்டு சுற்றுச்சுவரை ஏறி குதித்து, தனியாக இருக்கும் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துவதாக, தொடர்ந்து புகார் வந்தது.இது தொடர்பாக, பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கும், பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.ஆனால், பீர்க்கன்காரணை போலீசார், அப்புகாரை அலட்சியப்படுத்தி வந்தனர். இதனால், 'சைக்கோ' நபரின் அட்டகாசம் மேலும் அதிகரித்தது.கடந்த வாரம், புது பெருங்களத்துாரில் பல வீடுகளில் நுழைந்து, பெண்களை முறைத்து பார்ப்பதும், அவர்களின் துணிகளை முகர்ந்து பார்ப்பதும், திடீரென சத்தமிட்டு கொண்டு ஓடுவதும் போன்ற செயலில், அந்த சைக்கோ நபர் ஈடுபட்டு வந்தார்.இதனால், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்கு பதிந்த போலீசார், புதுபெருங்களத்துாரில் ஏராளமான 'சிசிடிவி' கேமராக்களை வைத்து ஆராய்ந்தனர்.அதில், அந்த வாலிபர், புதுபெருங்களத்துாரில் தங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை, நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்பிரபு, 30, என்பதும், டிப்ளமோ சிவில் படித்துள்ள அவர், வேலையில்லாததால், பெருங்களத்துாரில் நண்பருடன் தங்கி, ஓலா வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது.சொந்த ஊரில் வசித்தபோது, மனநல பிரச்னைக்கு மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும், சென்னை வந்த பின் அவற்றை உட்கொள்ளாதாதல், இரவில் வீடுகளில் புகுந்து பெண்களிடம் அட்டகாசம் செய்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து பீர்க்கன்காரணை போலீசார், தமிழ்பிரபுவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை