நடிகர் விஜய் வீட்டில் புகுந்த வாலிபர்
சென்னை : நீலாங்கரையில், த.வெ.க., தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. பலத்த பாதுகாப்பு மிகுந்த வீட்டின் மொட்டை மாடியில் நேற்று வாலிபர் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவரை காவலர்கள் பிடித்து, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண்,24 என்பதும், மன நலம் பாதிக்கப்பட்ட இவர், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. கைதான அருண், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=chki4meu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0