உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது

இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் கைது

மதுரவாயல்:மாங்காடு பகுதியை சேரந்தவர், 23 வயது இளம்பெண். இவர், மதுரவாயல் நுாம்பல் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.இவருக்கு அறிமுகமான கோவூர், தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த ஈனோக், 29, என்பவர், தன்னை காதலிக்க வற்புறுத்தி, அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், ஈனோக்குடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்தார்.இந்நிலையில், கடந்த 6ம் தேதி மாலை, பணி முடிந்து, அலுவலகம் அருகே இளம்பெண் நின்றிருந்தார்.அங்கு வந்த ஈனோக், இளம்பெண்ணிடம் தகராறு செய்து, காதலிக்க வற்புறுத்தி அவதுாறாக பேசி, கையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.இதுகுறித்த புகாரையடுத்து, மதுரவாயல் போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் ஈனோக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ