உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவின் நிலைய ஊழியருக்கு மாரடைப்பு

ஆவின் நிலைய ஊழியருக்கு மாரடைப்பு

செம்மஞ்சேரி:ஒடிசாவை சேர்ந்தவர் கிரோடரிபேரா, 55. சோழிங்கநல்லுார் ஆவின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் இவர், அதே பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, உடல்நலம் பாதிக்கப்பட்டதால், வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார்.இந்நிலையில், நேற்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடன் இருந்தவர்கள், அவரை மருத்துவமனை கொண்டு சென்றனர்.ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். செம்மஞ்சேரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை