உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவின் எக்ஸ் பக்கம் ஹேக்?

ஆவின் எக்ஸ் பக்கம் ஹேக்?

சென்னை,ஆவின் நிறுவனம் சார்ந்த அறிவிப்புகள், செய்திகள் குறித்த பதிவுகள், ஆவின் டி.என்., எனும் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிடப்பட்டு வந்தன. நேற்று காலை 'கிருஷ்ண ஜெயந்தி' வாழ்த்து தெரிவித்து, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை அப்பக்கத்தில், சினிமா குறித்து வேறு ஒரு பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ ஒன்றை, ஆவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. எனவே, ஆவின் 'எக்ஸ்' பக்கத்தை, மர்ம நபர்கள் 'ஹேக்' செய்துள்ளனரா என்ற கேள்வி, பொது மக்களிடையே எழுந்துள்ளது. ஆவின் 'எக்ஸ்' பக்கத்தை 18,000க்கும் மேற்பட்டோர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை