உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாவட்ட ரேங்கிங் கேரம் போட்டி அப்துல் ஆசிப், கீர்த்தனா சாம்பியன்

மாவட்ட ரேங்கிங் கேரம் போட்டி அப்துல் ஆசிப், கீர்த்தனா சாம்பியன்

சென்னை, சென்னை மாவட்ட கேரம் சங்கம் ஆதரவில், டான்பாஸ்கோ இளைஞர் மையம் சார்பில், மாவட்ட அளவிலான, 'ரேங்கிங்' எனும் தரவரிசை கேரம் போட்டி, பிராட்வேயில் உள்ள மையத்தில் நடந்தது. மொத்தம் 438 வீரர், வீராங்கனையர் பங்கேற்றறனர்.சீனியர் ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில், கிராண்ட் ஸ்லாம் கேரம் அகாடமி அப்துல் ஆசிப், 25 - 06, 23 - 01 என்ற கணக்கில், இந்திய அஞ்சல் வீரர் கிஷோர் குமாரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.பெண்கள் பிரிவில், செரியன் நகர் கேரம் சென்டர் கீர்த்தனா, 1 - 16, 25 - 01, 13 - 10 என்ற கணக்கில், மற்றொரு செரியன் நகர் கேரம் சென்டர் வீராங்கனை டெனினாவை தோற்கடித்து முதலிடம் பிடித்தார்.பதக்கம் அல்லா பிரிவில், யங் ஜெம்ஸ் கிளப் பரணி குமார், 13 - 08, 21 - 07 என்ற கணக்கில், ஸ்போர்ட்ஸ் அகடாமியின் மத்யூ இக்னஸை தோற்கடித்தார்.சப் - ஜூனியர் சிறுமியரில், செரியன் நகர் கேரம் சென்டர் டெனினா, 21 - 10, 15 - 08 என்ற கணக்கல், மற்றொரு செரியன் நகர் சென்டர் வீராங்கனை சஹானாவை வீழ்த்தினார்.அதேபிரிவில் சிறுவரில், பிளாக் ஸ்லாம் கேரம் அகடாமி நரேன், 14 - 07, 15 - 05 என்ற கணக்கில், செரியன் நகர் கேரம் சென்டர் தர்ஷனை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை