உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளி ஒடிசாவில் கைது

தலைமறைவு குற்றவாளி ஒடிசாவில் கைது

கொடுங்கையூர்:ஒடிசா மாநிலம், பகுடா, கஞ்சம், பங்கிடி பகுதியைச் சேர்ந்தவர் துக்குனா சாஹூ, 38. இவர் கடந்த 2021ல் சென்னை, கொடுங்கையூரில் தங்கி, கட்டட வேலை செய்தார்.வேலை செய்யும் இடத்தில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், பிரசன்னா என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இந்த வழக்கில், கடந்த 2021ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் வெளியில் வந்தார்.இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் துக்குனா சாஹூ தலைமறைவானார்.இதையடுத்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், கொடுங்கையூர் போலீசார் ஒடிசா சென்று, அவரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !